News April 12, 2024
சலவை செய்து வாக்கு சேகரித்த வேட்பாளர்

மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்கள் வெற்றிபெற நூதன முறையில் வாக்குகள் சேகரித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் மாதேஸ்வரன், நாமக்கல் நகரம் சந்தைபேட்டை புதூரில் இன்று சலவை தொழிலாளியிடம் சலவை செய்து வாக்கு சேகரித்தார். இவருடைய செயல் அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தது.
Similar News
News December 8, 2025
ராசிபுரம் அருகே நடந்த துயரம்!

ராசிபுரம் அருகே ஆர்.புதுப்பாளையத்தை சேர்ந்த தணிகை செல்வன் (20) கட்டனாச்சம்பட்டி பகுதியில் நடந்துசெல்லும் போது, அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த ராசிபுரம் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில், தம்மம்பட்டியை சேர்ந்த சரத் (19) மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டிச் சென்றது தெரியவந்தது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

நாமக்கல்லில் இருந்து இன்று இரவு 11:00 மணிக்கு மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்செந்தூர், திருவனந்தபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்ல உள்ள 17235 பெங்களூரூ – நாகர்கோவில் தினசரி விரைவு ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன. தேவைப்படுவோர் விரைவாக முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.