News November 19, 2025

சற்றுமுன்: விலை ₹3,000 உயர்ந்தது

image

கடந்த 5 நாள்களாக தொடர்ந்து சரிந்து வந்த வெள்ளியின் விலை இன்று(நவ.19) கிராமுக்கு ₹3-ம், கிலோவுக்கு ₹3,000-ம் உயர்ந்துள்ளது. சென்னையில் 1 கிராம் வெள்ளி ₹173-க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,73, 000-க்கும் விற்பனையாகிறது. இது குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, வரும் நாள்களில் வெள்ளியின் விலையில் கணிசமான ஏற்றம் இருக்கும் எனக் கூறியுள்ளனர்.

Similar News

News April 14, 2026

அதிகாலையில் தமிழக மீனவர்கள் கைது

image

தமிழ்நாடு மீனவர்களை கைது செய்து, இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. இன்று அதிகாலை மன்னார் வளைகுடா அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 4 மீனவர்களை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர். கடந்த 4 நாளுக்கு முன் ராமேஸ்வரம் <<19629350>>மீனவர்கள் <<>>10 கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News April 14, 2026

அதிமுகவுடன் செல்லாதது ஏன்? உடைத்து பேசிய பிரேமலதா

image

கூட்டணி பற்றி பேச தேமுதிகவை கடைசி வரை EPS அழைக்கவில்லை என பிரேமலதா கூறியுள்ளார். கூட்டணியை விட்டு ஓடிய பாமக, பாஜகவுக்கு முன்னுரிமை கொடுத்து EPS கூட்டணி வைத்ததாக கூறிய அவர், தேமுதிகவை பார்த்தால் அதிமுகவுக்கு எப்படி இருக்கிறது என கட்சியினர் மத்தியில் கேள்வி எழுந்தது என்றார். இதனால் தான் முதலில் இருந்தே அழைப்புவிடுத்து வந்த திமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

News April 14, 2026

மிசாவுக்கே பயப்படல, அமித்ஷாக்கா பயப்படுவேன்: CM

image

கல்வி நிதி ₹2,000 கோடி வேண்டும் என்றால், ஹிந்தி படிக்க வேண்டும் என மத்திய அரசு கட்டாயப்படுத்துவதாக CM ஸ்டாலின் குற்றம்சாட்டினார். ₹2,000 கோடிக்காக தமிழர்களின் சுயமரியாதையை அடமானம் வைக்க, நான் ஒன்றும் காலில் விழுந்து பதவி வாங்கிய EPS இல்லை என்ற அவர், நான் மிசாவுக்கே பயப்படாதவன், அமித்ஷாவுக்கா பயப்படுவேன் என்றார். தன்னுடைய விசுவாசம் என்றைக்குமே தமிழ்நாட்டு மக்களுக்குதான் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!