News March 24, 2025
சர்பதோஷம் நீக்கும் காளத்தீஸ்வரர்

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ராகு கேது ஒருவர் பின் ஒருவர் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். மேலும், நாகம் அடையாளம் காட்டிய தலங்களில் ஒன்றாக இந்த திருக்கோயில் உள்ளது. சர்ப்பதோஷம் இருப்பவர்கள் சனிக்கிழமையில் நடைபெறும் சர்பதோஷ நிவர்தியில் கலந்து கொள்ள சர்ப்ப தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க.
Similar News
News August 31, 2025
மாதம் ரூ.14,000 உதவித்தொகைவுடன் இலவச பயிற்சி

தாம்பரம் குரோம்பேட்டை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் ஓராண்டு ஐ.டி.ஐ. தொழில்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். மெக்கானிக், டீசல் மெக்கானிக், எலக்ட்ரீசியன், ஃபிட்டர், வெல்டர் பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி காலத்தில் மாதம் ரூ.14,000 உதவித்தொகை வழங்கப்படும். நேர்முகத் தேர்வு செப்.10 காலை 10 மணிக்கு குரோம்பேட்டை தொழிற்பயிற்சி பள்ளியில் நடைபெறும்.
News August 31, 2025
செங்கல்பட்டில் கடைகள் 24 மணி நேரமும் திறக்க ஐகோர்ட் அனுமதி.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகளும் 24 மணி நேரமும் செயல்படலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இரவு நேரங்களில் கடைகளை மூடும்படி போலீசார் உத்தரவிட்டதற்கு எதிராக ஹோட்டல்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இத்தீர்ப்பு குறித்து மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் அளிக்க டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. SHARE பண்ணுங்க.!
News August 30, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி விபரம்

செங்கல்பட்டு மாவட்டம் (30/08/25) இன்று செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.