News April 4, 2025
சமையல் எரிவாயு குறைதீர்ப்பு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மாதந்தோறும் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த மாதம் ஒன்பதாம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 11, 2026
தூத்துக்குடி: டீக்கடையில் நடத்திய சோதனையில் அதிர்ச்சி

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய போலீசார் பாளை ரோட்டில் உள்ள ஒரு டீக்கடையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டீக்கடை நடத்தி வரும் புதுக்குடியைச் சேர்ந்த செல்லப்பாண்டி (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 159 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், அதனை கொண்டு வந்த மாருதி காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
News January 11, 2026
தூத்துக்குடி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

தூத்துக்குடி மாவட்ட மக்களே, உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News January 11, 2026
தூத்துக்குடி: தனியார் பஸ் மோதி முதியவர் பரிதாப பலி

விளாத்திகுளம் அருகே குளத்தூர் தெற்குத் தெரு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (85). இவர் நேற்று முன்தினம் கீழ வைப்பார் வங்கிக்கு செல்வதற்கு குளத்தூர் பேருந்து நிலையம் ஓரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது சாயல்குடியில் இருந்து தூத்துக்குடி சென்ற தனியார் பேருந்து கணேசன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்து தூத்துக்குடி G.H-ல் சிகிச்சை பெற்று வந்த கணேசன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.


