News April 18, 2025
சமையல் உதவியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

விழுப்புரத்தில் காலியாக உள்ள 288 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. 21 – முதல் 40 வயது வரையுள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். கணவரை இழந்த, கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 10ஆம் வகுப்பு படித்த, தமிழில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகம்/ மாநகராட்சி/ நகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.<
Similar News
News November 28, 2025
விழுப்புரத்தில் பருவ மழை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தொழிலாளர் நலத்துறை இயக்குநர் திரு.எஸ்.ஏ.இராமான், ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் இன்று (நவ.28) நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்து கொண்டார்.
News November 28, 2025
விழுப்புரம்: நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

வங்கக் கடலில் நிலவும் ‘திட்வா’ புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் நாளை ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவ.29) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார். SHARE NOW!
News November 28, 2025
விழுப்புரம்:ஏரியில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு!

விழுப்புரம் அருகே உள்ள சோழகனூர் பழைய காலனியில் முதியவர் வீரமுத்து வாழ்ந்து வந்தார். இவர் நேற்று மாலை ஏரிப்பகுதியில் இயற்கை உபாதையை கழித்துவிட்டு ஏரி தண்ணீரில் கால் கழுவ சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்ததில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


