News April 18, 2025
சமையல் உதவியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கள்ளக்குறிச்சியில் காலியாக உள்ள 309 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. 21 – முதல் 40 வயது வரையுள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். கணவரை இழந்த, கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 10ஆம் வகுப்பு படித்த, தமிழில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகம்/ மாநகராட்சி/ நகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். <
Similar News
News November 24, 2025
கள்ளக்குறிச்சியில் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்!

கள்ளக்குறிச்சியில் நேற்று இரவு முதல் பெய்துவரும் கன மழையின் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (24.11.2025) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் அறிவித்துள்ளார். மேலும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 24, 2025
BREAKING: கள்ளக்குறிச்சி பள்ளிகளுக்கு விடுமுறை!

புயலின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியது, இந்த மழையின் காரணமாக ஏற்கெனவே தூத்துக்குடி, ராமநாதபுரம் உட்பட மாவட்டங்களுக்கு விடுமுறை விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.24) விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
News November 24, 2025
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணியின் காவலர் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (நவ.23) இரவு முதல் இன்று (நவ.24) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


