News April 28, 2025
சமூக வலைதள லிங்குகள் காவல்துறையை எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்துள்ளன, இந்நிலையில் கோரம்பள்ளத்தில் உள்ள எஸ்பி அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிவிப்பில், சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் ஆப்களின் லிங்குகளை தேவையில்லாமல் பதிவிறக்கம் செய்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என எச்சரித்துள்ளது.
Similar News
News April 28, 2025
தூத்துக்குடி மக்களே.. இத சாப்பிட்டு பாருங்க!

பனை மரங்கள் நிறைந்த திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தயாரிக்கப்படும் கருப்பட்டி தான் சுக்கு கருப்பட்டி. பதநீரைக் காய்ச்சி அதில் சுக்கு மிளகு இஞ்சி சேர்த்து சிறிய அச்சுகள் கொண்டு இந்த சுக்கு கருப்பட்டியை தயார் செய்கின்றனர். மிட்டாய் போல சாப்பிடும் இந்த சுக்கு கருப்பட்டி உடல் ஆரோக்கியத்திற்கும் அஜீரணத்திற்கும் சிறந்தது என்று நம்பப்படுகிறது. Share It.
News April 28, 2025
தூத்துக்குடி: ரயில்வேயில் உடனடி வேலை

தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, இராமேஸ்வரம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்ட ரயில் நிலையங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தரமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் மாத ஊதியமாக ரூ.18,000 முதல் 36,000 வரை வழங்கப்படும். தொடர்புக்கு: 90427-57341 அழைக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.
News April 28, 2025
காதலிக்கு நிச்சயமானதால் மாணவர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரை சேர்ந்த தனலட்சுமி – அர்ச்சுனன் தம்பதியரின் மகன் சரவணகுமார் (18) என்பவர் கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இவர் காதலித்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயமான விரக்தியில் கடந்த சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.