News December 4, 2024

சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து: பாஜக பிரமுகர் கைது

image

பாஜக பிரசார பிரிவு தலைவர் குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் சதீஷ் (45). இவர் முதல்வர், துணை முதல்வர், பெரியார் மற்றும் திராவிடம் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து திமுக ஐடி அணியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிந்து சதீஷை நேற்று (டிச.3) காலை கைது செய்து பல்லாவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News

News July 11, 2025

மின்சார ரயில்கள் ரத்து 1/3

image

சிங்கபெருமாள் கோயில் ரயில் பாதையில் இன்று (ஜூன் 11) பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே 10 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காலை 9:30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், செங்கல்பட்டில் இருந்து புறப்படும் சில ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். <<17026717>>தொடர்ச்சி<<>>

News July 11, 2025

ரத்தாகும் மின்சார ரயில்கள் பட்டியல் 2/3

image

▶சென்னை கடற்கரையில் இருந்து காலை 8:31, 9:02, 9:31, 9:51, 10:56 மணிக்கு செங்கல்பட்டுக்கு புறப்படும் ரயில்கள்.

▶காஞ்சிபுரத்திலிருந்து காலை 9:30 மணிக்கு சென்னை கடற்கரைக்கு புறப்படும் ரயில்.

▶செங்கல்பட்டில் இருந்து 9:55 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு புறப்படும் ரயில்.

▶செங்கல்பட்டில் இருந்து காலை 10:40, 11, 11:30, மதியம் 12, 13:10 மணிக்கு சென்னை கடற்கரைக்கு புறப்படும் ரயில்கள். <<17026728>>தொடர்ச்சி<<>>

News July 11, 2025

சிறப்பு ரயில்கள் இயக்கம் 3/3

image

▶காட்டாங்குளத்தூரில் இருந்து காலை 10.13 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு,

▶காட்டாங்குளத்தூரில் இருந்து காலை 10.46, 11, 11.20 மணிக்கு சென்னை கடற்கரைக்கு,

▶செங்கல்பட்டில் இருந்து காலை 11.30 மணிக்கு சென்னை கடற்கரைக்கு,

▶காட்டாங்குளத்தூரில் இருந்து 12.20 மணிக்கு சென்னை கடற்கரைக்கு,

▶செங்கல்பட்டில் இருந்து மதியம் 13.10 மணிக்கு சென்னை கடற்கரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!