News December 4, 2024

சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து: பாஜக பிரமுகர் கைது

image

பாஜக பிரசார பிரிவு தலைவர் குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் சதீஷ் (45). இவர் முதல்வர், துணை முதல்வர், பெரியார் மற்றும் திராவிடம் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து திமுக ஐடி அணியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிந்து சதீஷை நேற்று (டிச.3) காலை கைது செய்து பல்லாவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News

News November 25, 2025

செங்கை: பெண்ணிடம் 5 சவரண் சங்கிலி பறிப்பு!

image

செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் பகுதியைச் சேர்ந்தவர் பார்வதி. இவர், சிறிய மளிகைக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று(நவ.24) இரவு பார்வதி கடையில் இருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர், குளிர்பானம் வேண்டுமென கேட்டுள்ளனர். அதை எடுக்க திரும்பிய போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 25, 2025

செங்கல்பட்டு: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

image

செங்கல்பட்டு மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா என உடனே செக் பண்ணுங்க.

1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx

2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx

3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க. எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News November 25, 2025

செங்கல்பட்டு: தங்கத்தை பெருக வைக்கும் கோயில்

image

செங்கல்பட்டு காட்டாங்குளத்தூரில் காளத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இது பல்லவர் காலத்தில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயிலாகும். இங்கு அருளும் ஈசன் அதிக சக்தி கொண்டவர் என்பதால் நந்திதேவர் நேராகப் பார்த்து வழிபடாமல், ஒரு துவாரத்திலிருந்து வழிபடுகிறார். இங்கு நந்திதேவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், வீட்டில் தங்க ஆபரணங்கள் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!