News April 28, 2025

சமூக நலத்துறை வேலை வாய்ப்பு

image

இளைஞர் நீதிகுழுமத்திற்கு உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Data Entry Operator) பணியிடம் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் மே 6ஆம் தேதிக்குள் இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சம்பளம் ரூ.12,000 வழங்கப்படும். ஷேர் செய்யுங்கள்

Similar News

News October 22, 2025

சென்னையில் டன் கணக்கில் பட்டாசு கழிவுகள்

image

சென்னை: நேற்று மாலை 6 மணி வரை 60 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஆலந்தூர் மண்டலத்தில் 6.89 மெட்ரிக் டன், பெருங்குடி மண்டலத்தில் 6.03 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. சென்னையில் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் 6,000க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்கள் ஈடுபட்டனர்.

News October 22, 2025

சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

சென்னையில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்.22) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தேவையிற்றி வெளியே செல்வதை தவிர்த்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News October 22, 2025

சென்னையில் கடந்த ஆண்டை விட காற்று மாசு குறைவு

image

சென்னையில் இன்று காலை 6 மணியளவில் காற்று மாசு 154 ஆக பதிவாகியுள்ளது.2024 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது சென்னையில் அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் 287 ஆக பதிவாகியிருந்தது. குறைந்தபட்சமாக திருவொற்றியூரில் 150 ஆகவும் பதிவாகியிருந்தது. காற்று மாசு கடந்த ஆண்டு மிக மோசமாக பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு மிதமான அளவில் பதிவாகியுள்ளது. கனமழை பெய்த நிலையில் காற்று மாசு குறைந்தது.

error: Content is protected !!