News June 28, 2024

சமரச முறையில் தீர்வு காண சிறப்பு நீதிமன்றம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரசம் முறையில் தீர்வு காண ஜூன் 29 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதற்கு சட்ட பணிகள் ஆணைக் குழுவை disatriuvannamalai@gmail.com மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக் குழு தலைவர் பி. மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 1, 2025

தி.மலை: இட்லி சாப்பிட்ட சிறுமி திடீர் மரணம்!

image

வெம்பாக்கம் தாலுகா பனமுகை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு பிரனிதா (11) உள்ளிட்ட 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 23-ந்தேதி காலை வேர்க்கடலை சட்னியுடன் இட்லி சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில், தாய், மகள்ககுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அனைவரும் வேலூரில் மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பிரனிதா(11) பரிதாபமாக உயிரிழந்தார்.

News December 1, 2025

தி.மலை: தலைகுப்புற அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!

image

கலசபாக்கம் வட்டம் தென் பள்ளிப்பட்டு அருகே சாலையில் வாகனத்தை முந்த முயன்ற ஆந்திரா காரின் மீது மோதாமல் இருக்க ஒதுங்கிய அரசு பேருந்து நிலை தடுமாறி சாலை ஓரம் கவிழ்ந்தது. பேருந்தில் பயணிகள் குறைவாக இருந்ததால் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும், பேருந்தை மீட்க வந்த கிரேனும் கவிழ்ந்ததால், கூடுதல் கிரேன்கள் வரவழைக்கப்பட்டு பேருந்தும் கிரேனும் மீட்கப்பட்டது.

News November 30, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (நவ.30) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!