News April 4, 2025
சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளது. அக்கோவிலில் சித்திரை பெருந்திருவிழா வரும் ஏப்ரல்.15ஆம் தேதி காலை 10:31 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் நடைபெற உள்ளது. அச்சமயம் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற இருப்பதால், பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற கோவில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அம்மன் அருள் பெற அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
Similar News
News April 6, 2025
சமயபுரம் மாரியம்மன் கோயில் யானைக்கு நினைவு மண்டபம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமாக சுபத்ரா யானை இருந்தது. திருவிழா காலங்களில் இந்த யானை பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக யானை இறந்து விட்டது. சட்டமன்ற அறிவிப்பின்படி கோயில் நிர்வாகம் யானைக்கு சுமார் ரூ.49.50 லட்சத்தில் நினைவு மண்டபம் கட்டப்படுகிறது. இதனை அறங்காவலர் குழுத்தலைவர் வி.எஸ்.பி.இளங்கோவன், கோயில் இணை ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
News April 6, 2025
அங்கன்வாடி பணியாளர்: விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 17 அங்கன்வாடி பணியாளர், 17 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 262 அங்கவாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. எனவே இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். வேலை தேடும் உங்க நண்பருக்கு பகிரவும்… SHARE NOW!
News April 6, 2025
டிகிரி முடித்தவர்களுக்கு வங்கியில் வேலை

திருச்சியில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் GENERAL MANAGER பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.15,000-ரூ.25,000 வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் <