News August 18, 2024
சனி பிரதோஷத்தில் நந்திக்கு சிறப்பு பூஜைகள்

அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோவிலில் இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் பாலாபிஷேகம் நடைபெற்றது. இந்த சிறப்பு பிரதோஷ பூஜையை காண மக்கள் கூட்டம் கூட்டமாக கோவிலில் குவிந்தனர். சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அபிஷேகப் பால் பிரசாதமாக வழங்கப்பட்டது.
Similar News
News November 5, 2025
வெம்பக்கோட்டை: சிறுமிக்கு பாலியல் தொல்லை

வெம்பக்கோட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரவேல் என்ற கண்ணன்(42). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது சாத்துார் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 5, 2025
விருதுநகர்:காரின் மேல் அமர்ந்து சென்றவர்கள் மீது வழக்கு

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா அக்.30 அன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து விதிமுறைகளை மீறி காரின் கதவுகளை திறந்தபடியும், அதன் மேலே உட்கார்ந்தபடியும் சென்ற 9 வாகனங்கள் மீது அருப்புக்கோட்டை, திருச்சுழி போலீசார் வழக்கு பதித்துள்ளனர். மேலும் சோதனை சாவடிகளில் எடுக்கப்பட்ட வீடியோவை ஆய்வு செய்து விதிகளை மீறிய மற்ற வாகனங்கள் மீது வழக்கு பதியப்பட உள்ளது.
News November 4, 2025
விருதுநகர்: 9 வாகனங்களில் சென்றவர்கள் மீது வழக்கு

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா அக்.30 அன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து விதிமுறைகளை மீறி காரின் கதவுகளை திறந்தபடியும், அதன் மேலே உட்கார்ந்தபடியும் சென்ற 9 வாகனங்கள் மீது அருப்புக்கோட்டை, திருச்சுழி போலீசார் வழக்கு பதித்துள்ளனர். மேலும் சோதனை சாவடிகளில் எடுக்கப்பட்ட வீடியோ மூலம் ஆய்வு செய்து விதிகளை மீறி சென்ற மற்ற வாகனங்கள் மீது வழக்கு பதிவு.


