News March 29, 2025
சனி தோஷம் நீக்கும் எட்டியத்தளி அகஸ்தீஸ்வரர் கோயில்

அறந்தாங்கியிலிருந்து 5 கி.மீ தூரத்திலுள்ளது எட்டியத்தளி அகஸ்தீஸ்வரர் கோயில். இது, சனி மற்றும் ராகு தோஷத்தை ஒரு சேர நீக்கும் தலம். இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால், சனி தோஷமும், ராகு தோஷமும் நீங்கும். மேலும் ஜாதகத்தில் களத்தரன், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபட்டால் குறைகள் நீங்கி திருமண பாக்கியம் கிட்டும். இதை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News April 3, 2025
புதுக்கோட்டையில் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

புதுக்கோட்டையில் இன்று 03-04-2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட /மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ)100 ஐ டயல் அப் செய்யலாம் புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளார்.
News April 3, 2025
புதுக்கோட்டையில் தேர்வுகள் தேதி மாற்றம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை ஏப்ரல் 7ஆம் தேதி தமிழ் தேர்வு நடைபெற இருந்தது. ஆனால் அன்று நார்த்தாமலை தேர்த்திருவிழா உள்ளூர் விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 8ஆம் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது என புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் அனைத்து ஒன்றியங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
News April 3, 2025
புதுக்கோட்டையில் மின்நுகர்வோர் குறைதீர் முகாம்

புதுக்கோட்டை மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர் குறைதீர் முகாம் கோட்டம் வாரியாக புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, கீரனுார்,திருமயம் ஆகிய செயற்பொறியாளர்கள் அலுவலகங்களில் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றுவது, தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மாற்றுவது உள்ளிட்ட குறைகளை இந்த முகாமில் தெரிவிக்கலாம்.