News March 25, 2025

சந்தன மரம் கடத்திய மூன்று பேர் கைது

image

தமிழக கேரளா எல்லையான ஆரியங்காவு கடமான் பாறை வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில்  வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புளியரை கற்குடியை சேர்ந்த மணிகண்டன் ( 27 ), அஜித்குமார் (22), குமார் (35 ) ஆகிய மூன்று பேர் மரம் வெட்டி கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களை நேற்று போலீசார் கைது செய்து மரங்களை பறிமுதல் செய்தனர் .

Similar News

News December 1, 2025

தென்காசி : இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்!

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News December 1, 2025

தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் சம்பா நெல் பயிர் காப்பீடு செய்வதற்கு நவ.30 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இதற்கான காலக்கெடு இன்று டிச.1 வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து பயன்படி வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 1, 2025

வென்னிமலை முருகனுக்கு நாளை வருஷாபிஷேகம்

image

பாவூர்சத்திரம் வென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 12ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நாளை (டிச.2) நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் கணபதி ஹோமம், யாகசாலை பூஜையும்,  10.30 மணி முதல் 12 மணிக்குள் விமானம் மற்றும் மூலவர் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.  1 மணிக்கு அன்னதானமும், இரவு முருக பெருமான் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

error: Content is protected !!