News April 11, 2025
சத்துணவு மையத்தில் வேலை

கோவை மாவட்ட நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில், மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 331 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமிக்கப்பட உள்ளன. தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு ஓராண்டுக்கு பின் சிறப்பு காலமுறை ஊதியத்தில் ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.28. அசல் சான்றுகளுடன் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News July 7, 2025
காதலி பிரிந்த விரக்தியில் வாலிபர் தற்கொலை

வால்பாறையை சேர்ந்தவர் சீனிவாசன்(29). குனியமுத்தூர் பகுதியில் தங்கி இருந்த வேலை பார்த்து வருகிறார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் கருத்து வேறுபாடு காரணமாக இவரிடம் விலகி இருந்ததாகவும் கூறப்படுகிறது. காதலி பேச மறுத்த விரக்தியில் சீனிவாசன் நேற்று முந்தினம் இரவு தனது அறையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவரது நண்பர் அளித்த தகவலின் பெயரில் போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
News July 6, 2025
கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ஜபார். இவரது மனைவி மன நலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி வந்துள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார், அப்துல் ஜபார் இறந்து 6 நாள்கள் ஆனதை உறுதிசெய்தனர். அவரது மனைவியிடம் விசாரித்த போது, எலி இறந்து வாடை வருவதாக நினைத்தேன் என்றார். கணவன் இறந்தது கூட தெரியாமல், மனைவி வாழ்ந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News July 6, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (06.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.