News April 28, 2025

சத்துணவு மையத்தில் வேலை: கடைசி வாய்ப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 87 சமையல் உதவியாளர் பணியிடங்களை நேரடி பணி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக் செய்து<<>> தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிக்க நாளை (ஏப்.29) கடைசி தேதியாகும். மற்றவர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

Similar News

News November 6, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை அளவு விவரம்

image

வெப்பசலனம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று இரவு லேசான மழை பெய்தது. இன்று காலை 6.30 மணி வரையிலான நிலவரப்படி மயிலாடுதுறையில் அதிகபட்சமாக 26 மிமீ மழை பதிவாகியுள்ளது. செம்பனார்கோயிலில் 9.20 மிமீ மழை பெய்துள்ளது. கொள்ளிடத்தில் 1.20 மிமீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 6, 2025

மயிலாடுதுறை: பெண் குழந்தை உள்ளதா? விண்ணப்பியுங்கள்

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News November 6, 2025

மயிலாடுதுறை: மின்நிறுத்தம் ஒத்திவைப்பு

image

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரம் மணக்குடி துணைமின் நிலையம் அரையபுரம், முருகமங்கலம், மூவலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால் மின் நிறுத்தம் செய்யப்படுவது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!