News January 24, 2025
சத்துணவு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் முதல்வரின் கவனத்தை ஈர்க்க தலைநகரில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று (ஜன.23) நடத்தினர். தமிழ்நாடு முழுவதும் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும், ரூ.3000 தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்ய முடிவு செய்துள்ள தமிழக அரசின் நிலைப்பாட்டினை கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
Similar News
News September 15, 2025
திருவள்ளூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு காவல் துறையினரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த 71 வாகனங்களை வரும் 19-ம் தேதிக்குள் அபராதத்தொகையை செலுத்தி மீட்டுக் கொள்ளலாம். மேலும் உரிமைக் கோரப்படாத வாகனங்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாகவும் கலெக்டர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
News September 15, 2025
திருவள்ளூர்: BE போதும்..ரூ.80,000 வரை சம்பளம்

திருவள்ளூர் பட்டதாரிகளே, மத்திய அரசு நிறுவனமான ‘இஞ்ஞினியர்ஸ் இந்தியா’-வில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு தேர்வெழுத அவசியம் இல்லை. மாதம் ரூ.72,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு BE முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <
News September 15, 2025
அண்ணா சிலைக்கு அமைச்சர் மரியாதை

அண்ணாவின் பிறந்தநாளில் ஆவடி, காமராஜர் நகரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் நாசர் மரியாதை செலுத்தினார். மேலும் ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் சார்பில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் எனும் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். உடன் மாநகர மேயர் உதயகுமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.