News April 28, 2025
சத்துணவு உதவியாளர் பணி: நாளை கடைசி

திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 236 சமையல் உதவியாளர் பணி நிரப்பப்பட உள்ளன. பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். 21 – முதல் 40 வயது வரை இருக்கலாம். கணவரை இழந்தவர்கள், கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை உண்டு. தமிழில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இன்றைக்குள் இந்த <
Similar News
News September 13, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதில் மோட்டார் வாகன விபத்து, குடும்ப நல, காசோலை மற்றும் சமாதானமாக செல்லக்கூடிய குற்றவியல் வழக்குகள் சமரசம் பேசி முடிக்கப்படும். வங்கி மற்றும் கட்டண நிலுவை சார்ந்த நிலுவையில் அல்லாத வழக்குகளும் பரிசீலிக்கப்படும். மேலும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் ஜூலியட் புஷ்பா வழிகாட்டுதலின் பேரில் இந்த அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
News September 12, 2025
திருவள்ளூர்: இங்கு வழிபட்டால் இதனை நன்மைகளா?

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் 1000 வருட ஜெகந்நாதபெருமாள் கோவில் உள்ளது. இங்குள்ள பிருகு தீர்த்தத்தில் நீராடி பெருமாளை வணங்கினால் பாவங்கள் விலகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. மேலும், இங்கு சிறப்பு பூஜை செய்தால் படிப்பறிவு, அரசு வேலை, வெளிநாட்டு வேலை மற்றும் பதவி உயர்வு கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது. *தேவைப்படுவோருக்கு பகிர்ந்து தெரியப்படுத்தவும்*
News September 12, 2025
போலீஸ் வேலை: திருவள்ளூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருவள்ளூர்: இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான 3,665 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 21.09.2025. இப்போட்டித் தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு 17.09.2025 புதன்கிழமை காலை 10.30 மணியளவில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 8489866698, 9626456509 என்ற எண்ணை அழைக்கவும்.