News October 24, 2024
சத்திரக்குடி அருகே விபத்து; ஓட்டுநர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சுரேந்திரன் மகன் கனி(27). கார் ஓட்டுநரான இவர் நேற்று(அக்.23) 3 பேரை ராமேசுவரத்துக்கு காரில் அழைத்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, சத்திரக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் எதிரே வந்த லாரியுடன் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் ஓட்டுநர் கனி உயிரிழந்த நிலையில், மற்ற 3 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்து சத்திரக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 27, 2025
இராமநாதபுரம், பரமக்குடி MLA வேட்பாளர்கள் அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் 2026 சட்டமன்றத் தேர்தலில் பரமக்குடியில் மருத்துவர் எழில் இளவரசி, இராமநாதபுரத்தில் முத்து கேசவன் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என அறிவிப்பு வெளியிட்டார்.
News November 27, 2025
இராமேஸ்வரம் – திருப்பதி இடையே சிறப்பு ரயில்

இராமேஸ்வரம் – திருப்பதி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது. அதன்படி டிச.02, 09 ஆகிய தேதிகளில் இராமேஸ்வரத்தில் இருந்து மாலை 4:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10:10 க்கு திருப்பதி சென்றடையும். அதேபோல் திருப்பதியில் இருந்து டிச.03,10 ஆகிய தேதிகளில் காலை 11:15 க்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:45 இராமேஸ்வரம் வந்தடையும். இதற்கான முன்பதிவு நாளை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.