News January 1, 2025
சத்குரு கொண்டாடிய புத்தாண்டு விழா

கோவை ஆலாந்துறையில், ஈஷா சார்பாக புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இதில் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு கலந்து கொண்டு, சத்குரு பேசுகையில் “அடுத்த ஆண்டில் நாம் ‘மிராக்கிள் ஆப் தி மைண்ட்’ என்ற செயலியை அறிமுகம் செய்ய இருக்கிறோம். புத்தாண்டில் நீங்கள் இந்த உலகத்தை ஒளிரச் செய்ய வேண்டும். நீங்கள் மிகவும் அற்புதமான மனிதராக இருப்பதன் மூலம், இந்த உலகிற்கு சிறந்த பரிசினை அளிக்க முடியும் என்றார்.
Similar News
News November 20, 2025
கோவை: அமீபா பாதிப்பு.. தாமதிக்க வேண்டாம்!

கேரளாவில் அதிகரித்து வரும் அமீபா பாதிப்பு கோவையில் இல்லையெனினும், பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல். மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுச்சாமி கூறுகையில், “இந்த பாதிப்பு கோவையில் பதிவாகவில்லை. தனிப்பட்ட எச்சரிக்கை ஏதும் கொடுக்கவில்லை. எனினும் கண்காணித்து வருகிறோம். காய்ச்சலுடன் ‘ஆல்டர் சென்சார் அமீபா’ எனும் மனம் குழம்பிய நிலை இருந்தால், தாமதிக்காமல் மருத்துவமனை அழைத்து வரவேண்டும்” என்றார்.
News November 19, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (19.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 19, 2025
“மருதமலை முருகனை தலை வணங்குகிறேன்” பிரதமர் மோடி!

கோவை, இயற்கை வேளாண் கூட்டமைப்பு மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, கோவையில் குடிகொண்டுள்ள மருமலை முருகனை தலைவணங்குவதாக கூறினார். மேலும் “கோவை என்பது கலாச்சாரம், கனிவு, கவின் படைப்புத்திரன் ஆகியவற்றை தனக்கு சொந்தமாக்கிக்கொண்ட பூமி. தென்னகத்தின் சக்திபீடமான கோவை, தேசத்திற்கே ஜவுளித்துறையில் பங்களிப்பு செய்கிறது. இங்குள்ள ஜவுளிதொழில் தேசத்தின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிக்கிறது” எனத் தெரிவித்தார்.


