News August 2, 2024
சதுரகிரி வந்த SI மாரடைப்பால் மரணம்

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆகஸ்ட் 1 – 5 ஆம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று(ஆக.,2) திருப்பூர் மாவட்டத்தில் சார்பு ஆய்வாளர் பணிபுரிந்த பாலசுப்பிரமணி என்பவர் சதுரகிரி கோயிலுக்கு நடந்து செல்லும்போது பசுகிடை என்ற இடத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
Similar News
News October 24, 2025
சிவகாசி: உத்தரவை மீறியதா பட்டாசு ஆலைகள்?

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசுகளே முக்கிய பங்கு வகித்தன. இதனிடையே உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள “சரவெடி” பட்டாசுகளை பொதுமக்கள் அதிகளவில் வெடித்ததால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். எனவே சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி சரவெடி தயாரிக்கப்படுகிறாதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
News October 24, 2025
அரசு மருத்துவமனையில் தினமும் ஒரு கலர் படுக்கை விரிப்பு

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வண்ணக் குறியீட்டு படுக்கை விரிப்பு முறை புதிதாக அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதை மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெய்சிங் துவக்கி வைத்தார். இதில் ஞாயிற்றுக்கிழமை இளம் நீளம், திங்கள் பிங்க், செவ்வாய் கரு நீலம், புதன் மெரூன், வியாழன் ஊதா, வெள்ளி பச்சை, சனி சிவப்பு என வாரத்தின் ஒவ்வொரு நாளும் வண்ண படுக்கை விரிப்புகள் வழங்கப்படுகிறது.
News October 24, 2025
விருதுநகர்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

விருதுநகர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <


