News April 18, 2025
சதுரகிரி மலைப்பாதையில் யானைகள் நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சம்

ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் சதுரகிரி சுந்தரமகலிங்கம் கோயில் உள்ளது. உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுப்படி கடந்த 3-ம் தேதி முதல் பக்தர்கள் தினசரி 100 பக்தர்கள் மலையேறி சென்று வழிபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கோவிலுக்கு சென்று விட்டு இறங்கி கொண்டிருந்த போது சின்னபசுக்கிடை – இரட்டைலிங்கம் இடையே யானைகள் கூட்டமாக வந்ததால் பக்தர்கள் அலறி அடித்து ஓடினர்.
Similar News
News November 16, 2025
விருதுநகர்: போக்சோவில் 11-ம் வகுப்பு மாணவன் கைது

நரிக்குடி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் 11-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி வீட்டில் தனியாக இருக்கும் போது பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார், சிறுவனை மதுரை சிறார் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
News November 16, 2025
விருதுநகர்: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க
News November 16, 2025
விருதுநகர் காருக்குள் இறந்த நிலையில் சிறுவன்

மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் திருவிழாவிற்கு பாட்டி வீட்டிற்கு கடந்த நவ.13ம் தேதி திருமங்கலம் நடுகோட்டை ராஜசேகர், மகன் சண்முகவேல் 7, வந்திருந்தனர். விளையாடிக் கொண்டிருந்த சண்முகவேல் மாலை 4:00 மணியிலிருந்து காணவில்லை.இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த மாரிமுத்து காரை திறந்த போது காருக்குள் சண்முகவேல் இறந்த நிலையில் இருந்தார். உடலை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


