News August 16, 2024

சதுரகிரி கோவிலுக்கு நாளை முதல் அனுமதி

image

வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டுக்காக ஆகஸ்ட் 17 முதல் 20ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மழை பெய்தால் பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்படும் என  வனத்துறையினர் தெரிவித்தனர்.

Similar News

News November 16, 2025

விருதுநகரில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்

image

விருதுநகர் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில் “அறிவும் வளமும்” என்ற பொருண்மையின் கீழ் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் இன்று(16.11.2025) பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

News November 16, 2025

விருதுநகர்: போக்சோவில் 11-ம் வகுப்பு மாணவன் கைது

image

நரிக்குடி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் 11-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி வீட்டில் தனியாக இருக்கும் போது பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார், சிறுவனை மதுரை சிறார் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

News November 16, 2025

விருதுநகர்: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க

error: Content is protected !!