News May 18, 2024

சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

image

வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வரும் 20 ம் தேதி முதல் 24ம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மழை பகுதியில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.

Similar News

News April 21, 2025

பூக்குழியில் தவறி விழுந்த பக்தர் உயிரிழப்பு

image

அருப்புக்கோட்டை ரயில்வே பீடர் காலனியைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(41). இவர் அப்பகுதியில் ஏப்.17 அன்று நடைபெற்ற ஒரு கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்திய போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் பலத்த தீக்காயமடைந்தார். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

News April 20, 2025

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

image

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மெஷின் ஆப்பரேட்டர் பணிக்கு 25 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூபாய் 15,000முதல் 25,000 வரை வழங்கப்படுகிறது. 10-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. வயது வரம்பு 18-40, முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக் <<>>செய்யவும். *வேலை தேடுபவர்களுக்கு இதை ஷேர் செய்யவும்*

News April 20, 2025

விருதுநகர்: திரைப்படங்கள் காண ஆட்சியர் அழைப்பு

image

விருதுநகர் மாவட்ட பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க விருதுநகர், ஸ்ரீவி,ராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டை, காரியாபட்டியில் ஏப்.25 முதல் மே.01 வரை சிறந்த திரைப்படங்கள் திரையிடும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் 14 வயதுக்குட்பட்ட அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளலாம். பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 8608204154 என்ற எண்ணில் அழைக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!