News March 24, 2025
சதுரகிரிக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி

மதுரை மாவட்டம் சாப்டூர் அடுத்து அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்யச் செல்வது வழக்கம். இந்நிலையில் பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வரும் 27-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர். SHARE செய்யவும்.
Similar News
News November 8, 2025
மதுரை: தலைமை ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார்

மதுரை, சுப்பிரமணியபுரம் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் பாடமெடுக்கும் போது, ஆபாசமான வீடியோக்களை காட்டி பாலியல் தொந்தரவு செய்வதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து காவல் ஆணையர் அலுவலகத்திற்கு மாணவிகள் புகார் அளித்தனர். இது தொடர்பாக ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் மீது போக்சோ சட்டத்தில் தெற்கு மகளிர் காவல் துறையினர் வழக்குபதிவு.
News November 7, 2025
மதுரைக்கு இன்று மஞ்சள் ஆலர்ட் எச்சரிக்கை

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நவ.7) மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் ஆலர்ட் விடுக்கபட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
News November 7, 2025
மதுரை: பெண் பிள்ளைகள் திட்டம் ரூ.50,000 பெற இது முக்கியம்!

மதுரை மக்களே பெண் குழந்தைகள் பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசு 50,000 வழங்குகிறது.
தேவையான ஆவணங்கள்:
பெற்றோரின் ஆதார் கார்டு
குடியிருப்பு சான்றிதழ்
வருமான சான்றிதழ்
சாதிச் சான்றிதழ்
குழந்தை பிறப்புச் சான்றிதழ்
வங்கி பாஸ்புக்
பாஸ்போர்ட் புகைப்படம்
இத்துடன் உங்க மாவட்ட சமூக நல அலுவரிடம் விண்ணப்பியுங்க.
தொடர்புக்கு: 0452 – 2580259 மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க.


