News December 4, 2024

சட்ட படிப்பு காலி இடங்களுக்கு கலந்தாய்வு 

image

புதுச்சேரி, அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் முதுகலை சட்ட படிப்பு மற்றும் முதுகலை பிரெஞ்சு சட்ட பட்டய படிப்புக்கான 2024-25ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த 16ஆம் தேதி நடந்தது. இதில், முதுகலை சட்ட படிப்பில் 4 இடங்களும், முதுகலை பிரெஞ்சு சட்ட பட்டைய படிப்பில் 5 இடங்களும் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான மாப்-ஆப் கவுன்சிலிங் வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. ஷேர் செய்யவும்

Similar News

News November 26, 2025

புதுச்சேரி: ஆளுநர் மாளிகையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

image

இந்திய அரசியல் அமைப்பு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுவதை ஒட்டி, புதுச்சேரி மாநில ஆளுநர் மாளிகையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு, அரசியல் அமைப்பு தின உறுதி மொழியை வாசிக்க, அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

News November 26, 2025

JUST IN புதுவை: மிக கனமழை எச்சரிக்கை!

image

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘சென்யார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் காரணமாக புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் நவ.28 & நவ.29 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!

News November 26, 2025

புதுச்சேரி: ஆணையர் எச்சரிக்கை

image

புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஜ்ராஜ் செய்தி வெளியிட்டுள்ளார். இதில், மாடுகள் வளர்ப்போர் தங்களது மாடுகளை சாலைகள் மற்றும் பொது இடங்களில் திரிய விட கூடாது. சுகாதாரமான முறையில் தங்களுக்கு சொந்தமான இடத்தில் மட்டுமே வளர்க்க வேண்டும். லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் பொதுமக்களுக்கு இடையூராக கால்நடைகளை திரிய விட கூடாது. தவறினால் மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தனர்.

error: Content is protected !!