News June 25, 2024
சட்டென்று மாறுது வானிலை

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை தேனி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 23, 2025
தேனி: மூவர் குண்டாசில் கைது – ஆட்சியர் அதிரடி

தேனி மதுவிலக்கு போலீசார் கடந்த மாதம் கஞ்சா கடத்திய வழக்கில் சாய் (41) என்பவரை கைது செய்தனர். பெரியகுளம் பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவரை கடந்த மாதம் கொலை செய்த வழக்கில் போலீசார் மருதமுத்து (23), முத்துப்பாண்டி (21) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது எஸ்.பி பரிந்துரை செய்த நிலையில் மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டுள்ளார்.
News November 23, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 22.11.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.