News February 15, 2025
சட்டவிரோதமாக.. விசைப்படகு மீனவர்கள் போராட்டம் அறிவிப்பு

பாக்ஜல சந்தி கடல் பகுதியில் அத்துமீறி மீன் பிடிப்பில் காரைக்கால் மற்றும் நாகை மயிலாடுதுறை மாவட்ட விசைப்படகுகள் ஈடுபடுகின்றன. இதனால் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் மார்ச்.1ஆம் தேதி தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக நாட்டுப் படகு மீனவர் சங்க மாநில பொருளாளர் நம்புதாளை ஆறுமுகம் அறிவித்துள்ளார்.
Similar News
News July 11, 2025
இராமேஸ்வரம் – விழுப்புரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

இராமேஸ்வரம் – விழுப்புரம் ரயில் சேவை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்த நிலையில் விழுப்புரம் – ராமேசுவரம் சிறப்பு ரயில் சேவையானது 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக வரும் 12ம் தேதியில் இருந்து 27ம் தேதி வரை 6 முறைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
News July 11, 2025
இராமநாதபுரம்: ஆசிரியர் வேலை வேண்டுமா?

ராமநாதபுரம் மக்களே, தமிழகத்தில் காலியாக உள்ள 1,996 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு ஜூலை 10 (நேற்று) முதல் ஆகஸ்ட்12ம் தேதி வரை <
News July 11, 2025
இராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம்

இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (ஜூலை11) காலை 10 மணி – பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் (D பிளாக்) நடைபெறும் இம்முகாமில் 20 முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. 10 முதல் ITI, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் பங்குபெறலாம். வேலைதேடும் நண்பர்களுக்கு உடனே SHARE செய்யுங்கள்.