News September 16, 2024
சட்டம் அறிவோம்: BNS பிரிவு 296 என்ன சொல்கிறது?

பொது இடத்தில் ஏதேனும் ஆபாசமானச் செயலைப் புரிந்தாலோ அல்லது ஏதேனும் ஆபாசமான பாடலைப் பாடினாலோ, ஆபாசமான வார்த்தைகளை சொன்னாலோ அல்லது வாசகத்தை உச்சரித்தாலோ BNS சட்டப் பிரிவு 296இன் படி குற்றமாகும். இத்தகைய குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு 3 மாதம் வரை நீட்டிக்கப்படக் கூடிய சிறைத்தண்டனை அல்லது ₹1,000 வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
Similar News
News October 3, 2025
தூங்குவது கூட பிரச்னையாக உள்ளது: அஜித்குமார்

கார் ரேஸ்களில் கவனம் செலுத்த தொடங்கிய பிறகு சினிமா, வெப் சீரிஸ்களை பார்க்க கூட தனக்கு நேரம் கிடைப்பதில்லை என அஜித்குமார் தெரிவித்துள்ளார். விமானத்தில் பயணிக்கும் போது மட்டுமே ஓய்வு கிடைப்பதாகவும், அந்த நேரத்தில் கூட தூங்கிவிடுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தற்போது தூங்குவதும் பிரச்னையாகி உள்ளதாகவும், ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே தூங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
News October 3, 2025
இதயம் காக்கும் தாம்பத்ய உறவு

தாம்பத்ய உறவு என்பது இன்பத்தை அளிப்பது மட்டுமல்ல, உங்கள் இதயத்தையும் பாதுகாக்கும் என்கின்றனர் டாக்டர்கள். உடலுறவின் போது உடல் ஃபீல்-குட் ஹார்மோன்களை ரிலீஸ் செய்கிறது. இது ரத்த நாளங்களை தளர்த்தி ரத்தவோட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் ரத்த அழுத்தம், ஸ்ட்ரோக், இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு இயற்கையாகவே கட்டுப்படுத்தப் படுகிறது. இதை நோட் பண்ணிகோங்க தம்பதிகளே.
News October 3, 2025
இம்மாதம் முதல் சீனாவிற்கு நேரடி விமான சேவை

இந்தியா – சீனா இடையிலான நேரடி விமான சேவை வரும் 26-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இருநாட்டு அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா, சீனா உடனான எல்லை பிரச்னை காரணமாக, கடந்த 4 ஆண்டுகளாக இருநாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது.