News August 14, 2024

சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியே வெற்றி பெறும்

image

சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ”வரக்கூடிய 4 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியே வெற்றி பெறும். ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு செய்த துரோகத்தை மறக்க மாட்டோம். உடனடியாக தமிழ்நாட்டிற்கு செலுத்த வேண்டிய நிதி தொகையை ஒன்றிய அரசு செலுத்த வேண்டும். மேக தாதுவில் அணைக்கட்ட ஒன்றிய அரசு கர்நாடகா அரசை அனுமதிக்க கூடாது” என்றார்.

Similar News

News November 26, 2025

சென்னை: இளம்பெண் மீது தாக்குதல்.. போலீஸ் அதிரடி

image

சென்னை பரங்கிமலை தனியார் கல்லூரியில் படித்து வரும் 20 வயது இளம்பெண் அதே கல்லூரியில் படிக்கும் ராஜிக் முகமது (20) என்பவருடன் பழகி வந்துள்ளார். இதுகுறித்து அப்பெண்ணின் வீட்டிற்கு தெரியவரவே பேசுவதை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் ஆலந்தூர் சாலை வழியாக அந்தப்பெண் நடந்து சென்றபோது ராஜிக் திடீரென வழிமறித்து தாக்கினார். கல்லூரி மாணவியின் புகாரின் பேரில் பரங்கிமலை போலீசார் ராஜிக் முகமதுவை கைது செய்தனர்.

News November 26, 2025

சென்னை: ரூ.300 கேஸ் மானியம் வர இதை செய்யுங்க!

image

சென்னை மக்களே.. உங்க ஆண்டு வருமானம் ரூ.10,00,000 கீழ் இருந்தும் கேஸ் மானியம் கிடைக்கவில்லையா? எப்படி விண்ணப்பிக்கணும்னு தெரியலையா? முதலில் உங்க ஆதார் எண்ணை, பேங்க் மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். அதன் பிறகு, இங்கு <>கிளிக் <<>>செய்து மானியத்திற்கு பதிவு செய்யலாம். இனிமே, உங்க வங்கி கணக்குல ரூ.300 மானியம் வரும். உடனே ஷேர் பண்ணுங்க!

News November 26, 2025

சென்னை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில்<> http://cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.

2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.

3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.

4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்

error: Content is protected !!