News April 4, 2025
சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்த MLA!

விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட வெள்ளாங்கோடு ஊராட்சியில் மேஜர் ஸ்ரீ விக்கிர ராமர் என்ற கோயில் உள்ளது இது சுமார் 1,200 வருட பழமையானது. அந்த கோயிலில் அன்னதான மண்டபம் கட்டித்தர இயலுமா என விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மக்களுக்கு பயன்படுமானால் விரைவில் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
Similar News
News December 6, 2025
குமரி: ஆயுதப்படை வளாகத்தில் முதிர்ந்த மரங்களை அகற்ற ஏலம்

குமரி காவல்துறை இன்று 06.12.2025 வெளியிட்ட செய்தி குறிப்பில் குமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இடையூறாக மற்றும் முதிர்வுற்ற 19 மரங்களை வெட்டி அகற்ற நாகர்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் டிசம்பர் 10ம் தேதி காலை 9 மணிக்கு பொது ஏலம் விடப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ள ரூ.1000 கட்டி பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 6, 2025
குமரி: பாஜக சார்பில் பிச்சை எடுக்கும் போராட்டம்

நாகர்கோவில் அருள்மிகு தழுவிய மகாதேவர் ஆலய தெப்பக்குளத்தை சீர் செய்ய நிதி இல்லை என காரணம் கூறிய அறநிலைய துறையை கண்டித்து நாகர்கோவில் வடக்கு மண்டல பாஜக சார்பில் பிச்சை எடுக்கும் போராட்டம் கோவில் வளாகத்தில் இன்று (டிச-6) நடைபெற்றது. வடக்கு மண்டல பாஜக தலைவர் சுனில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
News December 6, 2025
குமரி: B.E. முடித்தால் ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை!

குமரி மக்களே, ஏவுகனை மற்றும் பாதுகாப்பு உபகரனங்கள் தயாரிக்கும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 80 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 27 வயதுகுட்பட்ட B.E./ B. Tech, முதுகலை டிகிரி படித்தவர்கள் டிச 29க்குள் <


