News April 13, 2025
சட்டத்தை மீறியவர்களுக்கு பாடம்: 4 பேர் மீது பாய்ந்தது வழக்கு!

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆர்ச்சம்பட்டி கருப்ப நாயக்கன் குளம் அருகே அரசு அனுமதி இன்றி மண் அள்ளப்பட்டதாக ஆர்டிமலை கிராம நிர்வாக அலுவலர் ராமநாதன் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த ராஜா, வெங்கடாசலம், சுப்பிரமணி, சுரேந்திரன் ஆகிய 4 பேர் மீது தோகைமலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து உங்கள் கருத்து என்ன?
Similar News
News November 12, 2025
தமிழ் கனவு மூன்றாம் கட்ட நிகழ்ச்சி

கரூர் மாவட்டத்தில் தமிழ் கனவு நிகழ்வு மூன்றாம் கட்டமாக, தளவாபாளையம் M.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நிகழ்ச்சியில் “அறிவின் வழியே மானுட விடுதலை” என்ற தலைப்பின் கீழ் வழக்கறிஞர் மதிவதனி, கல்லூரி மாணவ மாணவியர்களிடையே நாளை 13.11.2025 அன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ள நிலையில் சொற்பொழிவு ஆற்ற உள்ளார் என மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.
News November 12, 2025
கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கரூரில் பிரதம மந்திரியின் கௌரவ நிதி திட்டத்தின்கீழ், (PM-KISAN) தனித்துவ அடையாள அட்டை பெற்று பி.எம்.கிஷான் 21வது தவணை தொகை பெற முன்னோர்கள் பெயரில் பட்டா உள்ள விவசாயிகள் தங்களது பெயரில் பட்டா மாறுதல் பெற்று, அதனுடன் ஆதார் எண்ணை இணைத்து பதிவு செய்து தனித்துவ விவசாய அடையாள எண் பெற்றால் மட்டுமே பி.எம்.கிஷான் அடுத்த தவணை தொகை தொடர்ந்து கிடைக்கும். என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 12, 2025
கரூர்: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். இந்த தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!


