News April 8, 2025
சட்டக்கல்லூரி மாணவி மீது தாக்குதல்

அண்ணா சாலையில் நேற்று (ஏப்ரல் 7) தனியார் சட்டக்கல்லூரி மாணவியை தாக்கிய, சாந்தோம் டுமிங் குப்பத்தைச் சேர்ந்த ஆகாஷ் (22) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். மாணவியின் ஆண் நண்பரை ஆகாஷ் தினமும் பார்ட்டிக்கு அழைத்துச் செல்வது குறித்து மாணவி கேட்டபோது, தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ஆகாஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News October 31, 2025
சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

மோந்தா புயல் காரணமாக சென்னையில் கடந்த 28ம் தேதி பள்ளிகளுக்கு விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய நாளை பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை பள்ளிகளுக்கு கல்வித்துறை சார்பாக சுற்றறிக்கை வந்ததை தொடர்ந்து விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
News October 31, 2025
சென்னையில் வடகிழக்கு பருவமழை 29% கூடுதல்

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ’தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பை விட 36% கூடுதலாக பெய்துள்ளது. இயல்பாக 171.5 மிமீ மழை பொழியும் நிலையில், இன்று வரை 233.5 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும் சென்னையில் வடகிழக்கு பருவமழை 29% கூடுதலாக பெய்துள்ளது, 354.7 மிமீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.