News March 24, 2024
சங்கரன்கோவில் அருகே மூதாட்டி பலி

சங்கரன் கோவில் சேர்ந்த ஆறுமுகம் மனைவி லட்சுமி (70) என்ற மூதாட்டி பொதிகை தெப்பக்குளத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாக குளத்தில் தவறி விழுந்து பலியானார். தகவல் அறிந்த சங்கரன்கோவில் போலீசார் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.இது குறித்து சங்கரன்கோவில் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News April 19, 2025
தென்காசி: இயற்கை மாம்பழத்தை கண்டுபிடிப்பது எப்படி?

முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கல்லை பயன்படுத்துகிறார்கள். இப்படி பழுக்க வைத்த பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கல்லில் பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. மாம்பழத்தை தண்ணீரில் போட்டுப் பார்த்தால், இயற்கையாக பழுத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மிதக்கும். *SHARE IT*
News April 19, 2025
மீன் பாசி குத்தகைக்கு ஏலம் அறிவிப்பு

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கடனா மற்றும் குண்டாறு ஆகிய நீர் தேக்கங்களின் மீன் பாசி ஏலம் அறிவிப்பு நடைபெற உள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து வரும் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9788293060 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
News April 19, 2025
தென்காசியில் வேலை ரெடி

தென்காசி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆக்கவுண்டன்ட்,கேஷியர் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு டிப்ளமோ, டிகிரி படித்த 20 வயது முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. இங்கு <