News August 2, 2024

சங்கரன்கோவிலை சேர்ந்த 3 பேர் விபத்தில் உயிரிழப்பு

image

சங்கரன்கோவிலை சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் – கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில், இன்று(ஆக.,2) இருகன்குடி கோயிலுக்கு பாதையாத்திரை சென்றவர்கள் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த பக்தர்கள் முருகன், மகேஷ், பவுன் ராஜ் சம்பவ இடத்திலேயை உயிரிழந்தனர். விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 17, 2025

தென்காசி: உங்க நகை சீட் பாதுகாப்பா இருக்கா??

image

தென்காசி மக்களே, நீங்க சிறுக சிறுக சேமித்த பணத்தை வருங்கால புன்கைக்காக நகை சீட் போடுவோம்.. எனவே நகை சீட் போடும் போது இதல்லாம் கவனியுங்க.
1.அரசு அங்கீகார நிறுவனம்
2. மாதாந்திர தொகை
3. தள்ளுபடி, செய்கூலிகள்
4.பணத்தை திரும்பபெறுதல்
5.ஆவணக்கட்டணம் மற்றும் ரசீதுகள்
ஏற்கனவே நகை சீட்ல உள்ளவங்களும் இதல்லாம் சரிபாருங்க.தகவல்களுக்கு: 1800-11-4000 (அ) 14404 அழையுங்க.. மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE…

News September 17, 2025

செங்கோட்டை ஏசி ரயிலுக்கு இன்று முன்பதிவு

image

தசரா, தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களை முன்னிட்டு செங்கோட்டை சென்னை சென்ட்ரல் இடையே குளிரூட்டபட்ட சிறப்பு ரயில் செப்டம்பர் 25 அக்டோபர் 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் இரவு 9 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து செப்டம்பர் 24 அக்டோபர் 1, 8, 15, 22 ஆகிய புதன்கிழமைகளில் பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில்களுக்கு இன்று முன்பதிவு தொடங்குகிறது.

News September 17, 2025

தென்காசி: 50% மானியத்தில் வாங்க மிஸ் பண்ணாதீங்க!

image

தென்காசி மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா? அப்போ தமிழக அரசு கொடுக்கும் 5,000 மானியத்தை புடிங்க. தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்கள் வயது 25க்கு மேல் இருந்தால் தாராளமாக APPLY பண்ணலாம். தஞ்சை மாவட்ட சமூக நல அலுவரிடம் விண்ணப்பியுங்க தொடர்புக்கு: 04633-290547. மற்றவர்களுக்கும் SHARE செய்து APPLY பண்ண சொல்லுங்க!

error: Content is protected !!