News March 30, 2025
சங்கடம் தீர்க்கும் மொரட்டாண்டி சனீஸ்வரர்

புதுச்சேரி அருகே கழுவெளி சித்தர் தவம் செய்த இடமான மொரட்டாண்டி எனும் கிராமத்தில், உலக மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய சித்தரின் கனவில் வந்து அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நவக்கிரக கோயிலில் 27 அடி உயரம் கொண்ட சனீஸ்வரன் சிலை உள்ளது. மேலும் அங்கு மற்ற நவக்கிரக சிலைகள் 15 அடி உயரம் இருக்கும். இங்குள்ள சனீஸ்வரரை வணங்கினால் வாழ்வின் துன்பங்களை நீங்கும் என்று கூறுகின்றனர். இதை பிறருக்கும் பகிரவும்
Similar News
News April 17, 2025
வராக ஜெயந்திக்கு இதை மறக்காதீங்க

இரண்யாட்சன் என்ற அசுரனிடம் இருந்த இந்த பூமியை காக்க விஷ்ணு பகவான் எடுத்த மூன்றாவது அவதாரம் தான் வராக அவதாரம். நாளை வராக ஜெயந்தி திதி வர உள்ளது. இந்த நாளில் வராகரை வழிபட்டால் பெயர், புகழ், அந்தஸ்து, ஆயுள் ஆரோக்கியம், ஐஸ்வரியம் இவை எல்லாம் ஒரு சேர கிடைக்கும் என்பது ஐதீகம். அப்படி இல்லையெனில் வீட்டிலேயே பெருமாள் படத்திற்கு விளக்கு ஏற்றி வழிபடலாம். உங்கள் உறவினருக்கு ஷேர் செய்யுங்கள்..
News April 17, 2025
புதுச்சேரி: ரூ.56,100 சம்பளத்தில் அரசு வேலை

TNPSC குரூப் 1 வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் என மொத்தமாக 72 காலிப்பணியிடங்கள் உள்ளது. 21 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டபடிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.56,100 முதல் 1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய <
News April 17, 2025
தடையை மீறினால் நிவாரணம் நிறுத்தப்படும் – அரசு எச்சரிக்கை

புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியிலிருந்து ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 61 நாட்களில் எச்சரிக்கையை மீறி மீன்பிடி தொழிலில் மீனவர்கள் ஈடுபட்டால் புதுவை அரசின் மீன்வளத்துறையால் வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் நிறுத்தப்படும், என தெரிவித்துள்ளார்.