News April 13, 2025
சங்கடங்கள் நீக்கும் சாரம் முருகன் கோயில்

புதுவையில் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்று சாரம் முருகன் கோயில். தமிழ் கடவுளாக கருதப்படும் முருகனை, மற்ற நாட்களில் வழிபடுவதை விட தமிழ் புத்தாண்டில் வழிபட்டால் பல நன்மைகள் உண்டாகும். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க.
Similar News
News November 27, 2025
புதுச்சேரியில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடைந்து வடதமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை நோக்கி நவ.29 மற்றும் 30ம் தேதி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், புதுச்சேரி துறைமுகத்தில் இன்று ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டது.
News November 27, 2025
புதுச்சேரிக்கு நாளை முதல் ஆரஞ்சு அலர்ட்

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் நேற்று செய்தி வெளியிட்டுள்ளார். அதில், இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்திய அறிக்கையின்படி, வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று அடுத்த 48 மணி நேரத்தில் வரும் 28ம் தேதி முதல் 1ம் தேதி வரை புயலாக மாறக்கூடும். இதனால் புதுச்சேரிக்கு மிக கன மற்றும் அதி தீவிர மழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
News November 27, 2025
புதுச்சேரி: 2 நாள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

புதுச்சேரி பொதுப்பணித்துறை பொதுசுகாதார கோட்ட செயற்பொறியாளர் நேற்று செய்தி வெளியிட்டுள்ளார். அதில், முத்திரையர்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இன்றும்(நவ.27), தனபாலன் நகர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் நாளையும்(நவ.28) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் இங்கிருந்து குடிநீர் வினியோகம் பெறும் பகுதிகளில் குடிநீர் ரத்து செய்யப்படுபவதாக தெரிவித்தார்.


