News April 5, 2025
சகல செளப்பாக்கியங்களை அருளும் தில்லை காளி

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள தில்லை காளி கோயில் 1000 ஆண்டுகள் பழமையானதாகும். பார்வதியின் மீது கோபமுற்ற சிவன் கோர முகம் கொண்ட காளியாக மாற சாபமிட்டார். பின்னர் இருவருக்கு நடந்த நடன போட்டியில் தோல்வியடந்த காளி இந்த தில்லை பகுதியை வந்தடைந்தார். முற்காலத்தில் போருக்கு செல்லும் வீரர்கள் காளியை வணங்கி விட்டு செல்வார்கள். தில்லை காளியை வணங்கினால் சகல செளபாக்கியமும் கிடைக்கும் எனக் கூறுகின்றனர்.
Similar News
News November 16, 2025
கடலூர்: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை!

இந்திய ஸ்டீல் ஆணையத்தில் காலியாக உள்ள Management Trainee பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.50,000 – 1,60,000/-
3. கல்வித் தகுதி: B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
6. கடைசி தேதி: 05.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 16, 2025
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்; எச்சரிக்கை

வங்க கடலில் நேற்று குறைந்த காற்றழுத்து தாழ்வு மண்டலம் உருவானது.
இதனால், கடலில் 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், கடலூர் மீன்வளத் துறை உதவி இயக்குனர் நித்தியா பிரிய தர்ஷினி அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News November 16, 2025
கடலூர்: மீண்டும் கனமழை எச்சரிக்கை!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, கடலூர் மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளையும் (நவ.17) இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


