News October 15, 2025

கோவை: POST OFFICE-ல் வேலை ரெடி!

image

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக்.29க்குள் https://ibpsonline.ibps.in/ippbljul25/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும். டிகிரி முடித்த உங்கள் நபர்களுக்கு இத்தகவலை உடனே SHARE பண்ணுங்க.

Similar News

News October 20, 2025

நாளையும் மலை ரயில் சேவை ரத்து

image

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால், ஊட்டி மலை ரயில் பாதையில் கல்லாறு – ஹில்குரோவ் இடையே மண் சரிந்து பாறாங்கற்கள் விழுந்து தண்டவாளம் சேதமடைந்தது. இதனை தொடர்ந்து நேற்று, இன்று என இரு தினங்கள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில், தண்டவாளத்தில் விழுந்த பாறாங்கற்களை வெடிவைத்து தகர்க்க இருப்பதால், நாளையும் ரயில் சேவை (அக்.21) ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

News October 20, 2025

கோவையில் இங்கு பட்டாசு வெடிக்க மாட்டார்கள்!

image

கோவை மாவட்டம் சூலூர் அருகே கிட்டாம்பாளையம் கிராமத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய வகை வவ்வால் இனங்கள் உள்ளன. இதனை பாதுகாப்பதற்காக, கடந்த 26 ஆண்டுகளாக கிராம மக்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காமல் இருந்து வருகின்றனர். மேலும் இங்குள்ள ஆலமரம் மற்றும் புளிய மரங்களில் வசித்து வரும் வவ்வால்களை பாதுகாக்க சரணாலயம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.SHAREit

News October 20, 2025

சூலூர் விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

image

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ஷானு (47) என்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரர், சூளூர் விமானப்படை தளத்தில் சில ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று காலை 6 மணியளவில் பாதுகாப்பு கோபுரத்தில் பணியில் இருந்தபோது, ஷானு தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்துத் சூளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!