News March 19, 2025

கோவை: Graphic Designer ஆக ஆசயைா?

image

கோவை மாநகராட்சி சார்பில் நேற்று செய்தி குறிப்பை வெளியிட்டனர். இதில் இலவச கிராஃபிக் வடிவமைப்பு மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி மார்ச்.20 முதல் தொடங்குகிறது. இப்பயிற்சி ஒரு மாத காலம் நடைபெறும். தொழில்வாய்ப்பு திறன்களை வளர்க்கும் இப்பயிற்சியில் தொழில் முனைவோர், மாணவர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் சேரலாம். மேலும், விருப்பமுள்ளவர்கள் 63858- 37858 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். (Share பண்ணுங்க)

Similar News

News March 20, 2025

கோவை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்கோவை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில் புத்தாக்கப் பொறியாளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 18 வாரங்கள் கொண்ட இந்த பயிற்சி கோவை திருச்சி, சேலம், ஓசூர் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் தங்கும் வசதியுடன் வழங்கப்படும் என்றார்.

News March 20, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (20.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 20, 2025

கிராம வாரியாக குழு ஏற்படுத்தி கண்காணிப்பு

image

கோவை மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா நேற்று கூறுகையில், கோவை மாவட்டத்தில் கடந்த 2024ல் 37 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 97 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. இதுதொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டில் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளுக்குட்பட்ட கிராம வாரியாக குழு ஏற்படுத்தி, குழந்தை திருமணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றார்.

error: Content is protected !!