News March 26, 2025

கோவை: 210 காட்டு யானைகள் உயிரிழப்பு

image

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதியில், காட்டு யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இதனிடையே மனித – யானை மோதல் குறித்த விபரங்களை ஆசிய யானைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மோதல் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி வனக்கோட்டத்தில் கடந்த 2010 முதல் 2024 வரையிலான கடந்த 15 ஆண்டுகளில், பல்வேறு காரணங்களால், 210 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 7, 2025

கோவை: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வே வேலை!

image

கோவை மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள, ஜூனியர் இன்ஜினியர் உள்ளிட்ட 2569 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு வேலைக்கு ஏற்ப டிப்ளமோ, பிஎஸ்சி பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,400 வழக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.10ம் தேதிக்குள், <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 7, 2025

கோவையில் அதிர்ச்சி: 5 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

image

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளன. அதில் இறந்தவர்கள் 1,13,861, வீட்டில் ஆள் இல்லாதவர்கள், இடம் மாறியவர்கள், இரட்டை வாக்குரிமை 3,92,533 என மொத்தமாக 5,06,394 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News December 7, 2025

கோவையை உலுக்கிய சம்பவம்: பாய்ந்த குண்டாஸ்

image

கோவையில் விமான நிலையம் பின்புறம் சில தினங்களுக்கு முன்னர் மாணவி ஒருவர் மூவர் கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் கருப்பசாமி, கார்த்தி, தவசி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். மூவர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டதன் பேரில் இன்று போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!