News March 20, 2025
கோவை: 197 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

கோவை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் அனைத்து தொழிலாளர் துணை ஆய்வர்கள், முத்திரை ஆய்வர்கள் இணைந்து, கடந்த மாதம் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பணியாளர்களுக்கு இருக்கை வசதி அமைத்து கொடுக்காத, 8 நிறுவனங்கள் உட்பட மொத்தமாக 197 நிறுவனங்கள் மீது, வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 28, 2025
மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: ஒடிசா இளைஞர் கைது

கோவில்பாளையத்தில் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, ஒடிசா இளைஞரை போலீசார் கைது செய்தனர். கோவில்பாளையம் அண்ணா நகர் பகுதியில், பொன்னுத்தாய்(65) என்ற மூதாட்டிக்கு, அதே பகுதியில் கட்டட வேலை செய்து வந்த, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சமீர் மாலிக்(23) என்பவர், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அவரை கோவில்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
News March 28, 2025
கோவை மக்களுக்கு எச்சரிக்கை

கோவை மக்களுக்கு மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. ▶ காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். ▶ வெயில் நேரத்தில் இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவும். ▶ தேநீர், காபி மது மற்றும் கார்பன் ஏற்றப்பட்ட (Carbonated) குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். இவை உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும். கோவை மக்களே இதை உங்க உறவினர்களுக்கு Share பண்ணுங்க.
News March 27, 2025
கோவையில் தரிசிக்க வேண்டிய சிவன் கோயில்கள்!

வெள்ளியிங்கிரி ஆண்டவர் கோயில் – பூண்டி. பட்டீஸ்வரர் கோயில் – பேரூர். மன்னீஸ்வரர் கோயில் – அன்னூர். வில்லீஸ்வரர் கோயில் – இடிகரை, நஞ்சுண்டேஸ்வரர் கோயில் – காரமடை. சங்கமேஸ்வரர் கோயில் – கோட்டைமேடு. அம்மணீஸ்வரர் கோயில் – மெட்டுவாவி. அழுக்குசாமி கோயில் – வேட்டைக்காரன்புதூர். நீலகண்டேஸ்வரர் கோயில் – ஒண்டிப்புதூர். பரமசிவன் கோயில் – இதை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.