News November 3, 2025
கோவை: 10வது படித்தால் அரசு வேலை.. ரூ.50,400 சம்பளம்!

கோவை மக்களே, தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
Similar News
News December 8, 2025
கோவை மத்திய சிறையில் தண்டனை கைதி உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் பூஞ்சோலை ஜீவா நகரை சேர்ந்தவர் முருகன்(57). இவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த 5 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக, கோவை ஜிஎச்சில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார். இதுகுறித்து சிறை வார்டன் சரவணகுமார் அளித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 8, 2025
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு

கோவை விமான நிலையத்திற்கு இன்று காலை வந்த ஏர் அரேபியா விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது உடமைகளுடன் வந்த பயணி ஒருவர் கண்ணாடியை உடைத்து, தப்பிச் செல்ல முயற்சி செய்தார். அவ்வாறு தப்பிச்செல்ல முயன்ற வரை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவரது உடைமைகளை CISF உதவியுடன் சுங்கதுறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
News December 8, 2025
கோவை: வாக்காளர்களே! SIR UPDATE

கோவை மக்களே, தற்போது இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் SIR படிவம் கொடுத்தவர்கள். electoralsearch.eci.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் EPIC நம்பரை பதிவு செய்தால் உடனடியாக பதிவேற்றப்பட்ட பெயர் வந்திருந்தால் காட்டி விடுகிறது. திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் (Draft) தங்கள் பெயர் உள்ளதா என செக் பண்ணுங்க! SHARE IT


