News December 5, 2024
கோவை: 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை!

கோவை பேரூர் பட்டீசுவரசுவாமி கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், பேரூர் பட்டீசுவரசாமி கோயிலில் இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனை எழுத்தர், பதிவறை எழுத்தர், துப்புரவு பணியாளர் பணியிடங்கள் உள்ளன. தகுதியுள்ளவர்கள் வரும் 03.01.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விபரங்களுக்கு (www.hrce.tn.gov.in , https://perurpatteeswarar.hrce.tn.gov.in) சென்று தெரிந்து கொள்ளலாம்.
Similar News
News November 28, 2025
கோவை இரவு ரோந்து காவலர் விபரம்

கோவை மாவட்டத்தில் இன்று (28.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
BREAKING கோவை: “தவெகவின் வெற்றி உறுதி”

தவெகவில் இணைந்த செங்கோட்டையைன் இன்று சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் தவெகவிற்கு மக்கள் ஆதரவு அதிகம் உள்ளது. வரும் 2026ம் ஆண்டில் விஜய் முதலமைச்சராக வருவார். அவருக்கு நான் உறுதுணையாக இருப்பேன். விஜய் உடன் தான் மக்கள் சக்தி உள்ளது. என் உயிர் மூச்சு உள்ளவரை தவெகவிற்கு பணியாற்றுவேன்” என தெரிவித்தார்.
News November 28, 2025
கோவை: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க


