News April 8, 2025

கோவை: வீட்டில் இருவர் சடலமாக மீட்பு!

image

கேரளாவை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் மகேஷ் ஆகியோர், கோவை, துடியலூரில் பேக்கரி நடத்தி வந்துள்ளனர். இன்று நீண்ட நேரம் ஆகியும், இருவரும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் பேக்கிரி ஊழியர்கள் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தபோது, மகேஷ் கழுத்தறுக்கப்பட்ட நிலையிலும், ஜெயராஜ் தூக்கிட்ட நிலையிலும் சடலமாக இருந்துள்ளனர். இருவரது உடலையும் மீட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Similar News

News December 5, 2025

கோவை மக்களே! இந்த App மூலம் புகாரளிக்கலாம்!

image

கோவை: உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால், அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைக மற்றும் புகார்களை மனுவாக அளிக்களாம். செல்போனில் <>TN CM HELPLINE <<>>என்ற App-ஐ பதிவிறக்கம் செய்து, அதில் உங்கள் புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். இதை SHARE செய்யுங்கள்!

News December 5, 2025

போத்தனூர்–பரௌனி ரயில் தாமதமாக இயக்கப்படும்

image

சேலம்–ஈரோடு ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், போத்தனூரில் இருந்து புறப்படும் போத்தனூர்–பரௌனி விரைவு ரயில் டிசம்பர் 6, 13, 20 மற்றும் 27 ஆம் தேதிகளில் தாமதமாக இயங்கும். வழக்கமான 11.50 மணிக்கு பதிலாக, ரயில் 50 நிமிட தாமதத்துடன் மதியம் 12.40 மணிக்கு புறப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

News December 5, 2025

கோவை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!