News March 22, 2025
கோவை வரும் தமிழக ஆளுநர்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வரும் 25ஆம் தேதி கோவை வருகிறார். கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 45வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவிப்பு செய்கிறார். இது தொடர்பாக போக்குவரத்து மற்றும் காவல்துறை சார்பில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வழங்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
Similar News
News March 28, 2025
கோவை எஸ்.பி அறிவுறுத்தல்!

கோவை எஸ்.பி. கார்த்திகேயன் வெளியிட்ட செய்தி குறிப்பில், இணையதளத்தில் பணத்தை இழந்துவிட்டால் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது சைபர் கிரைம் புகார்களுக்கு ஆன்லைன் மூலமாக www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்தால், கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பில், இழந்த பணத்தை மீட்டுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தியுள்ளார். SHARE IT!
News March 28, 2025
கோவையில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு

கோவை மாவட்டத்தில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 19,509 மாணவர்களும்,19,925 மாணவிகள் என மொத்தம் 39,434 பேர் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர். அதேபோல் தனித் தேர்வுகள் 1,211 மாணவர்கள் எழுதுகின்றனர். மாவட்டத்தில் 518 பள்ளிகளில் 158 தேர்வு மையங்களில் இந்த பொதுத் தேர்வானது நடைபெறுகிறது. 220 பறக்கும் படையினர் மாணவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
News March 28, 2025
ஓய்வூதியர் குறைகளைவுக் கூட்டம்

கோவை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று ஓய்வூதியர் குறைகளைவுக் கூட்டம் அரசு செயலாளர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் பவன்குமார், கருவூலத்துறை மண்டல இணை இயக்குநர் பாலமுருகன், மாவட்ட கருவூல அலுவலர் குமரேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) நிறைமதி, என பலரும் கலந்து கொண்டனர்.