News October 25, 2024

கோவை: ரூ.500 செலுத்தினால் ரூ.10 லட்சம் அறிவிப்பு

image

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டுக்கு ரூ.500 பிரீமியத்தில், ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு திட்டம், ரூ.700 பிரீமியத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு வழங்குவதாகவும், 18 முதல் 65 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். தபால்காரர் கொண்டுவரும் ஸ்மார்ட்போன் மூலம் இணையலாம் என கோவை அஞ்சல் கோட்ட முதுநிலை அஞ்சல கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 9, 2026

கோவையில் லஞ்சம் கேட்டால்.. உடனே CALL!

image

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspcbedvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0422-2449550 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

News January 9, 2026

கோவை: திடீர்’னு பெட்ரோல் காலியா? இத பண்ணுங்க!

image

கோவை மக்களே ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில், திடீரென வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வளித்துள்ளது. அந்நிறுவனத்தின்<> ‘Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 9, 2026

கோவை வரும் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின்

image

தேசிய தலைவராக பொறுப்பேற்றதுமே புதுச்சேரி செல்லும் வழியில் கடந்த மாதம் தமிழகம் வந்த பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் இரண்டாவது முறையாக நாளை (ஜன.10) தமிழகம் வருகிறார். நேரடியாக கோவை வரும் அவருக்கு விமான நிலையத்தில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். நாளை மாலை கோவை வந்தடையும் அவர் இரு நாட்கள் தங்கியிருந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

error: Content is protected !!