News May 16, 2024
கோவை: ரயில் பயணிகள் கவனத்திற்கு..!

கோவை ரயில்வே அதிகாரிகள் இன்று(மே 16) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை வழியாக இயக்கப்படும் நிஜாமுதீன் கொச்சுவேலி வாராந்திர ரயில் 01.07.24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயணிகள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் பயணிக்கலாம். மேலும் திப்ருகர் முதல் நாகர்கோவில் வரை செல்லும் சிறப்பு ரயில் 03.07.24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 12, 2025
கோவை சாலைகளில் லாரி விபத்துகளில் 32 பேர் உயிரிழப்பு

கோவை நகரில் ஜனவரி முதல் அக்டோபர் வரை லாரிகள் சம்பந்தப்பட்ட விபத்துகளில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இது அதிகம். பீக் ஹவரில் லாரி நுழைவுத் தடையும், மணிக்கு 30 கி.மீ வேக வரம்பும் அமலில் இருந்தாலும், மீறல்கள் அதிகரித்து வருகின்றன. இதை கட்டுப்படுத்த போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
News November 12, 2025
மேட்டுப்பாளையம் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

மேட்டுப்பாளையம் அடுத்த வேடர் காலனி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜ மனோகரன். இவர் நேற்றிரவு சிறுமுகையில் இருந்து பணி முடித்து விட்டு பாலப்பட்டி வழியாக டூவீலரில் வீடு திரும்பியுள்ளார். அப்போது, பாலப்பட்டியில் இருந்து சிறுமுகை நோக்கி சென்ற பிக்கப் வாகனத்தின் மீது டூவீலர் எதிர்பாராத விதமாக மோதியதில், ராஜ மனோகரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 12, 2025
கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் (நவ.13) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், திருச்சி ரோடு, உடையாம்பாளையம், சர்க்கரசமக்குளம், கோவில்பாளையம், குரும்பகாபாளையம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கல்லிபாளையம், மொண்டிகாலிபுதூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.


