News March 21, 2025

கோவை ரயில்வே பயணிகள் கவனத்திற்கு

image

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக, திருவனந்தபுரம் வடக்கு – ஷாலிமார் இடையே, வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. திருவனந்தபுரம் வடக்கு – ஷாலிமார் ரயில் 28.03.2025 மற்றும் 04.04.2025 ஆகிய தேதிகளில், 4.20 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு, 13.40 மணிக்கு ஷாலிமாரை சென்றடையும் என ரயில்வே துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். 

Similar News

News March 22, 2025

கோவை: எஸ்.பி கார்த்திகேயன் கடும் எச்சரிக்கை

image

கோவை எஸ்.பி கார்த்திகேயன் இன்று விடுத்த செய்தி குறிப்பில், சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள். கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212, வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அதில் அறிவுறுத்தியுள்ளார்.

News March 22, 2025

சினிமா படப்பிடிப்பு துணை நடிகர் மயங்கி விழுந்து உயிரிழப்பு 

image

கோவை மருதமலை அடிவாரத்தில் மலையாள சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த படத்தில் நடித்து வரும் துணை நடிகர்கள் மருதமலை அடிவாரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்கியிருந்தனர். அவர்களுடன் துணை நடிகர் கேரளா மலப்புரத்தை சேர்ந்த ஹரிதாசன் (39) என்பவரும் தங்கியிருந்தார். நேற்று அவர் அறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து வடவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 21, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (21.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!